Wednesday 13, Aug 2025

728x90 AdSpace

Latest News
    Saturday, May 8, 2010

    Blank சுதந்திரம்

















    மேடையிலொருவன் பொய்குரைப்பான்
    தாவி மேடையேறித்
    தலையிற்குட்ட முடியவில்லை

    சூரிய நிலாக்களாய்க்
    கண்ணுக்கழகிய பெண்கள்
    கடந்தேகும் போதெல்லாம்
    அழகி நீங்களென
    வாயாரச் சொல்ல வலிமையில்லை

    தண்ணீரே எண்ணெயாய்த்
    தாமரைகள் விளக்கெரிக்கும்
    குளம்கண்டால்
    ஓருடையும் களையாமல் ஓடிக்குதித்து
    நீர் குடைந்தாட நேரமில்லை

    நீண்டுகிடக்கும் நெடுஞ்சாலையில்
    வேப்பமரம் விரித்த நிழற்பாயில்
    துண்டு தலைக்கு வைத்துத்
    துயில் கொள்ள இயலவில்லை
    நீர்வழிப்படூஉம் புணைபோல் நானும்
    நதிவழிப்பாட்டுக் கடலடையக்கூடவில்லை

    ரயிலில் வரும் சில வியாபாரிகள்
    எட்டுக்கட்டையில் இலக்கியம் பேசுகையில்
    அபாயச்சங்கிலி பிடித்திழுக்கும்
    ஆண்மையின்னும் கூடவில்லை

    கடன்கேட்கப் போனவீட்டில்
    உப்புக்கரிக்கும் உணவைத்
    துப்பித் தொலைக்கத் துணிவில்லை

    சிலரது மரணத்தை
    தேசிய லாபமென்று
    அறிக்கையிடத் திராணியில்லை

    முதலமைச்சர் வேலைகோரி
    முதலமைச்சருக்கே சொல்லச்சொல்லும்
    மூடப்பரிந்துரை மூட்டைகளை
    முகத்தில் விசிறியடிக்க முடியவில்லை


    தேசியகீதம் இசைக்கும் நேரம்
    பிளிறும்-கனைக்கும்-பேசும்-நகரும் பிராணிகளை
    வண்டலூர் அனுப்ப வசதியில்லை

    இனிப்பு-ஊறுகாய்-நெய்யெல்லாம்
    மூக்கோடு முடிகின்றன
    நாற்பது வயதானால் நாவுக்கு உரிமையில்லை

    எண்ணெய்க்குளியலின் பிற்பகல் தூக்கத்தை
    வைத்தியர் சட்டம் வழங்கவில்லை

    எழுத மை வேண்டும்
    வானத்தின் நீலத்தில்
    சில குடங்கள் கேட்டேன்
    மசியவில்லை

    வான்குடைய வேண்டும்
    சிட்டுக் குருவிகளின் சிறகுகளைக்
    கடன் கேட்டேன்

    தரமாட்டான் மனிதனென்று தரவில்லை

    கற்றை மேகமாய்க் காடுகடக்க
    ஒற்றைத் தேன்துளியாய்ப் பூவுள்உருள
    நீண்ட கனவு... நிறைவேறவில்லை

    குறைந்தபட்சம்
    ஞாயிறு மட்டுமேனும்
    எட்டுமணித் தூக்கம் இயலவில்லை

    பழைய பெரியவரே
    பாலகங்கா�ர திலக்!
    சுதந்திரம் எனது பிறப்புரிமையென்பது
    சும்மா.

       * * * * *
    Next
    This is the most recent post.
    Previous
    தோழிமார் கதை
    • Blogger Comments
    • Facebook Comments

    24 comments:

    1. poem is good,viramuthu sir i love you

      ReplyDelete
    2. vairamuthu sir yenakku neengal tamil ilakkiyamum ilakanamum katru tharuveergala
      http://thamizhaithedi.blogspot.com

      ReplyDelete
    3. kavidhai arumai ena
      paaraattuum vayadhai adayavillai naan....
      kavidhai padithu
      paravasam adaindha
      manasukku
      theeni kidaitha sandhosham...!
      indha kavidai
      padikkum bodhellaam
      kidaikkum enbadhu mei!

      ReplyDelete
    4. சுதந்திரம் நமது பிறப்புரிமை என்பது சும்மாதான்!
      சிம்மாசனத்தில் இருந்து கூவும் சிங்காரக்குயில்களுக்கு!
      பிறப்புரிமை என்பது சும்மா தான் !மக்களை அதிகாரத்தால் அழுத்தும் கோலோச்சும் மன்னர்களின்
      பின்னால் இருந்துகொண்டு பாடும் அலங்கார இலக்கிய கர்த்தா மேளங்களுக்கு!
      ஆனால்!
      பிறப்புரிமை என்பது சும்மா இல்லை!
      ஒரு செகுவேரா! ஒரு மாசேதுங் ,ஒரு பகத்சிங்!
      போன்ற மாமனிதர்களுக்கு !
      தத்துவம் மட்டும் என்றும் சோறுபோடாது உண்மையான மக்கள் நலன்வேண்டும் உண்மைத் தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் இலக்கில்லாத, நல்ல கட்சி அமைப்பு,கொள்கை இல்லாத ,திட்டமில்லாத தலைமைக்கு தலையாக,வாலாக நாம் உள்ளவரை ,உண்மையான உழைக்கும் மக்கள் வாழும் தத்துவத்தை
      செயாலாக்காதவரை
      சுதந்திரம் நமது பிறப்புரிமை என்பது சும்மாதான்!

      ஆனால்!
      சுதந்திரம் நமது பிறப்புரிமை என்பது சும்மா இல்லை
      அடிமைப்பட்ட மக்களுக்கு அவர்களோடு அவர்களாக இருந்து போராடும் உழைக்கும் போராளிகளாம் செங்குயில்களுக்கு

      ReplyDelete
    5. //”நீர் வழிப்படும் புணை போல் நானும்
      நதி வழிப்பட்டுக் கடலடையக்கூடவில்ல்லை”//

      எது சரி ?

      ”வழிப்பாட்டு” ? ”வழிப்பட்டு”

      எனக்கென்னவோ தட்டச்சுப் பிழை இருப்பது போல் தோன்றுகிறது. தயவு செய்து சரி பார்க்கவும். நன்றி.

      ReplyDelete
    6. வழிப்பட்டு என்பது சரியே ! :)

      ReplyDelete
    7. Vairamuththu has been probably the only lyricist who has been consistently writing about the various issues affecting the tamil people and tamil culture - peace, globalization, global warming. Even recently, he has published a book called Moonram Ulaga Por. His progressive politics has been discussed in a recent article on tamils.com (http://tamils.com/t-blogs/entry/vairamuthu-s-dream-for-a-just-world.html). Why is that none of his such globally relevant books are not being translated into English and marketed properly?

      ReplyDelete
    8. Kaniporiyil ungal kavithaiyai padithaen,kaagitham endru marathiyil muthamitaen, uthadugal suttuvitathu...

      ReplyDelete
    9. manathil mendum mendum vanthu nilaladum kavithai

      ReplyDelete
    10. நான் நேசிக்கும்
      இக்கவிஞ்சனை
      கட்டி அணைக்கவும் இயலவில்லை
      உண்மையில்
      சுதந்திரம் சும்மாதான் ஐயா...

      ReplyDelete
    11. Arputha Unarvu!!!!! Ungal kavithai

      ReplyDelete
    12. kavingyane..!!
      un kavidhai paditha, enaku
      muzhu sudhandhiram kidaithadhu.
      negilchiyil, vaai vittu AZHUVADHARKU..
      vaazhga un vaarthaigal.!!

      ReplyDelete
    13. உங்கள் வலைப்பூவை இலவசமாக தமிழ் ப்ளாக் இல் சேர்த்திட வருகை தாருங்கள் http://tamil-bloglist.blogspot.in/

      ReplyDelete
    14. உங்கள் வலைப்பூவை இலவசமாக தமிழ் ப்ளாக் இல் சேர்த்திட வருகை தாருங்கள் http://tamil-bloglist.blogspot.in/

      ReplyDelete
    15. உங்கள் வலைப்பூவை இலவசமாக தமிழ் ப்ளாக் இல் சேர்த்திட வருகை தாருங்கள் http://tamil-bloglist.blogspot.in/

      ReplyDelete
    16. நமக்கான அரசியல் மாற்றம் நிகழும்போதுதான் உண்மையான விடுதலை என்பதை ஒப்புக்கொள்ள முடியும்.

      ReplyDelete
    17. நமக்கான அரசியல் மாற்றம் நிகழும்போதுதான் உண்மையான விடுதலை என்பதை ஒப்புக்கொள்ள முடியும்.

      ReplyDelete
    18. Good i like this Please visit : www.alfadigitel.com

      ReplyDelete

    Item Reviewed: சுதந்திரம் Rating: 5 Reviewed By: Blank