
பூமலரும் வேளையிலும்
விண்மீனைக் காவல் வைத்து
வெண்ணிலவு தூங்கையிலும்
கவிதை என்னும் பேய் பிடித்து
ஆட்டுதடி என்னை-என்
கண்ணிரண்டும் திறந்திருந்தும்
காண்பதில்லை உன்னை
0
தொலைபேசி அடித்தாலும்
சொந்தங்கள் சிரித்தாலும்
சுளையான பணமெல்லாம்
தொகைதொகையாய் வந்தாலும்
மூளைக்குள் அவைசென்று
முட்டுவதே இல்லை - தாய்
மொழியோடு கரைதல் போல்
முக்தி பிறிதில்லை
0
மற்றவரின் காயத்தில்
மருந்தாகும் வேளையிலும்
மற்றவரின் வேர்களுக்கு
மழையாகும் வேளையிலும்
இதற்குத்தான் தமிழென்று
எனக்குள்ளே சொல்வேன் - நான்
எவருக்கும் தெரியாமல்
கைதட்டிக் கொள்வேன்
0
கருவோடு திருவில்லை
கடவுள் செய்த அருளில்லை
குருவோடு வந்த தமிழ்
குடும்பத்துப் பொருளில்லை
காளிவந்து என் நாவில்
எழுதவில்லை சூலம் - சிறு
கடுகளவு உள்ளதெலாம்
காலம் தந்த ஞானம்!
0
முத்தத்தில் ஒதுங்கி
முடிவளர்த்த முனிவர்களும்
சத்தத்தில் பிதுங்கித்
தனிமைகண்ட கவிஞர்களும்
காடுசென்று வாழ்ந்ததற்குக்
காரணங்கள் உண்டு - என்
கவிவாழ நானுமொரு
காடுபுகல் என்று?
0
காற்றாட வனமில்லை
கால்நனைக்க நதியில்லை
நாற்றாடும் வயலில்லை
நனெழுத இடமில்லை
சகாராவில் விட்டாலும்
தமிழ்கொண்டு சேர்ப்பேன் - சுடு
தார்ச்சாலை மீதும் ஒரு
தாமரையாய்ப் பூப்பேன்
0
சத்தம் உறங்கிவிட்ட
ஜாமத்தின் மேடையிலே
புத்தம் புதுத்தலைப்பு
புத்தியிலே உதிக்கையிலே
வெண்ணிலவைப் பந்தாட
விரையுதடி எண்ணம் - இந்த
வெளிஎதிலே முடியுமென்று
விளங்கவில்லை இன்னும்
0
கண்ணீரும் வியர்வைகளும்
கல்விகளும் கலவிகளும்
மண்ணுலகை வலம் கொண்டு
வாங்கிவந்த பட்டறிவும்
எல்லாமே கவிதைக்கு
எரிபொருளாய் ஆச்சு - எனை
இயக்குவது காற்றல்ல
இலக்கியத்தின் மூச்சு
0
புவிகொண்ட ஆறுகளின்
புனல்வந்து கலந்ததனால்
கவிகொண்ட பிள்ளைமனம்
கடலாகிப் போனதடி
கவிதையென்னும் சமுத்திரத்தில்
ஆவியான மேகம் - உன்
காதோரம் ஒலிக்கின்ற
கானங்கள் ஆகும்
0
சித்தத்துக் குள்ளே
சேர்த்து வைத்த படைப்புத்தீ
ரத்தத்துக் குள்ளே
ரகசியமாய் எரியுதடி
கட்டையிலே போகையிலும்
கட்டாயம் சோதி - என்
கண்ணுக்குள் கனலுமடி
கவிதையெனும் ஜோதி
இந்த (வெளி)எதிலே முடியுமென்று
ReplyDeleteவிளங்கவில்லை இன்னும்
------------------------------
இந்த வெறிஎதிலே முடியுமென்று
விளங்கவில்லை இன்னும்..
---------------------------------
கவிதைகள் அனைத்து அருமை என்று சொல்லி...சராசரியாக சொல்ல எனக்கு விருப்பம் இல்லை..
நானும் வைரமுத்துவின் கவிதைகளுக்கு தீவிர ரசிகன்..
இப்படியொரு கவிஞர் இனி பிறப்பது அரிது...
கவிதைகள் அனைத்தையும் போஸ்ட் செய்த உங்களுக்கும் எனது நன்றிகள்..
ramgoby.blogspot.com
Hello,
ReplyDeleteI don't understand Tamul, I speak french and a little bit English. I am the painter who made this portrait of Jean Genet. Thank you for your text and it would be great if I could understand it. :-)
Its a poem written by poet Vairamuthu about the pain he gets by seeing Tamil language facing and the immense happiness,pride he gets from the language
Deleteஎனக்கு திரு. வைரமுத்து அவர்களின் கவிதைகள் மிகவும் பிடிக்கும். இங்கு அவரது கவிதைகளை ரசித்து ருசிக்கிறேன். அவருக்கு என் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.நன்றி. போஸ்கோ.
ReplyDeleteboscop.blogspot.com
நல்ல கவிஞன்...நல்ல சிந்தனையாளன்...ஆனாலும் அந்த......
ReplyDeletethamizhukku vanakkam
ReplyDeleteVazhthukkal solla naan vayadhanavan ilai intha kavithaiyai paaratta vaarthaikalum ilai
ReplyDeleteYendrendrum ungal kavithaiku adimaiyana rasigan........
Vazhthukkal solla naan vayadhanavan ilai intha kavithaiyai paaratta vaarthaikalum ilai
ReplyDeleteYendrendrum ungal kavithaiku adimaiyana rasigan........
கவிதை சிறப்பாக உள்ளது.
ReplyDeleteகவிதை சிறப்பாக உள்ளது.
ReplyDeleteவைரமுத்துவைப் பற்றி
ReplyDeleteஎங்க ஊர்க் கவி நீ
ஏங்குகிறேன் உன்னைப் பார்க்க நேரில்.
உன் வரிகளை நான் வாசிக்கவில்லை.அதை நான் சுவாசிக்கிறேன்.வைரத்தோடு சேராத முத்து உன் பேரோடு மட்டும் இணைந்தது முத்தின் வெண்மையாலோ வைரத்தின் ஒளியாலோ அல்ல உன் கவியின் கிறக்கத்தால்
வாழும் வரை என் நினைவில் நீ (உன் வரிகள்)
வைரமுத்துவைப் பற்றி
ReplyDeleteஎங்க ஊர்க் கவி நீ
ஏங்குகிறேன் உன்னைப் பார்க்க நேரில்.
உன் வரிகளை நான் வாசிக்கவில்லை.அதை நான் சுவாசிக்கிறேன்.வைரத்தோடு சேராத முத்து உன் பேரோடு மட்டும் இணைந்தது முத்தின் வெண்மையாலோ வைரத்தின் ஒளியாலோ அல்ல உன் கவியின் கிறக்கத்தால்
வாழும் வரை என் நினைவில் நீ (உன் வரிகள்)