728x90 AdSpace

Latest News
Monday, April 19, 2010

கவிஞர் வைரமுத்துவின் வாழ்க்கை தடங்கள்

வைரமுத்துவின் பிறப்பிடம் வடிகபட்டி. இது தமிழ் நாட்டின் தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி தொகுதியாகும். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இராமசாமித் தேவர், அங்கம்மாள் ஆகியோருக்கு புதல்வராக 1953 ஆம் ஆண்டு ஜூலை 13 திகதியன்று பிறந்தார்.

கிராமத்தின் எழிலோடு பின்னிகொண்டதில் 12 வயதிலேயே கவியாற்றல் பெற்றதோடு பாடசாலையிலும், கல்லூரியிலும் தன கவிதைகள் மூலம் அனைவரின் ஈர்ப்பையும் பெற்றுகொண்டார் வைரமுத்து. தனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியை வடிகபட்டியில் முடித்ததோடு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம். ஏ. தமிழ் இலக்கியப்பட்டம் பெற்றார்.

தமிழ் நாட்டின் புதுக்கதை முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் இவரது 19 ஆவது வயதில் 2 ஆம் ஆண்டு பட்டபடிப்பை படிக்கும் தருணத்தில் இவரது முதல் கவிதை தொகுதியான வைகறை மேகங்கள் வெளியிடப்பட்டது.

1984 ஆம் ஆண்டில் பாரதிராஜாவின் 'நிழல்கள்' திரைப்படத்தின் "இது ஒரு பொன் மாலை பொழுது" என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 5 முறை பெற்ற பெருமைக்குரியவர்.

படைப்புகள்


கவிதைத் தொகுப்பு

  • வைகறை மேகங்கள்
  • சிகரங்களை நோக்கி
  • திருத்தி எழுதிய தீர்ப்புகள்
  • தமிழுக்கு நிறமுண்டு
  • இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல
  • இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்
  • இதனால் சகலமானவர்களுக்கும்
  • இதுவரை நான்
  • கொஞ்சம் தேனீர் நிறைய வானம்
  • பெய்யென பெய்யும் ம‌ழை
  • நேற்று போட்ட கோலம்
  • ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்
  • ஒரு மெளனத்தின் சப்தங்கள்

நாவல்

  • தண்ணீர் தேசம்
  • கள்ளிக்காட்டு இதிகாசம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)
  • கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது)

விருதுகள்

  • சாகித்ய அகாதமி விருது
  • சிறந்த பாடலாசிரியருக்கன தேசிய விருது (ஐந்து முறை). விருது பெற்ற திரைப்படங்கள் (பாடல்கள்)
  • முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா)
  • ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை)
  • கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...)
  • சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்)
  • கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..)
  • கலைமாமணி விருது (1990)
Newer Post
Previous
This is the last post.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: கவிஞர் வைரமுத்துவின் வாழ்க்கை தடங்கள் Rating: 5 Reviewed By: Blank